சிவனொளிபாதமலையை தரிசித்துவிட்டு நீராட சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி.
குறித்த சம்பவம் இன்று மாலை நான்கு மணியளவில் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகருக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் நீராடிக் கொண்டிருக்கும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு கற்குகையில் சிக்கியதன் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆணமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைககாக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
