புலமைப் பரிசில் பரீட்சை - மட்டு. செங்கலடி மத்திய கல்லூரி மாணவி முதலிடம்

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்குடா செங்கலடி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவி ஜனார்த்தன் துலக்சா 178 புள்ளிகளை பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

செங்கலடி ரமேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மாணவியே இப் பெறுபேற்றினைப் பெற்று தமது பெற்றோருக்கும் பாடசாலைக்கும், பாடசாலைச் சமூகத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.

அதே சயம் செங்கலடி மத்திய கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய 125 மாணவர்களில் 28 பேர் சித்தியடைந்துள்ளதுடன் ஜனார்த்தன் துலக்சா பாடசாலையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவியாவார்.

இதே வேளை இம்முறையும் செங்கலடி மத்திய கல்லூரி குறித்த பரீட்சையில் 100% சித்தி மட்ட பெறுபேற்றையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை