நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி நாளைய தினம் 6மணித்தியாலத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் P முதல் W வரையான 8 வலயங்களில் நாளைய தினம் 6 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி குறித்த காலை 08.30 முதல் மாலை 05.30 வரையான காலப்பகுதிக்குய் 4 மணித்தியாலமும் 30 நிமிடங்களும், மாலை 05.30 முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 50 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
