இராணுவ தளபதியிடம் இருந்து சுமந்திரனுக்கு வந்த தொலைபேசி அழைப்பு

ஜனாதிபதியுடனான சந்திப்பு நேற்று நிறைவடைந்து, வெளியேறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரனுக்கு இராணுவ தளபரி ஜெனரல் ஷவேந்திர சில்வா தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

அதாவது ஜனாதிபதியுடனான சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரனுக்கு வடக்கிலுள்ள காணிகளை பாதுகாப்பு பிரிவினர் கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார் .

இதற்கு பதில் அளித்த இராணுவ தளபதி அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை எனவும் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வடக்கில் காணி பிரச்சினைகள் இருக்குமானால், அது குறித்து இராணுவ தளபதியுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி தமக்கு கூறியதாக சுமந்திரன், ஷவேந்திர சில்வாவிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை