டீசல் பெற்றுக்கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நேற்று காலை 9.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு பெரமளவு உழவு இயந்திரங்கள் வருகை தந்திருந்தன.
இந்த நிலையில், குறித்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி அருகில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் விழுந்துள்ளது.

