தற்போது இறக்கப்படும் டீசல் விநியோகம் குறித்த முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது

தற்போது இறக்கப்படும் டீசல் விநியோகம் குறித்த முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை போக்குவரத்து சபை, புகையிரதம், மின்சாரம் மற்றும் வர்த்தக வலயங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இம்முறை இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட மூன்றரை முதல் நான்கு மில்லியன் லீற்றர் வரையிலான தொகையை இரட்டிப்பாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் 8,000 தொன் டீசல் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட உள்ளது.

நாட்டிற்கு வந்துள்ள டீசல் எரிபொருள் விநியோகம் இன்று ஆரம்பமானது.

முத்துராஜவெல பெற்றோலிய சேமிப்பக வளாகத்தில் கப்பல் தரையிறக்குகும் பணி நேற்று நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமானது. ஆனால், 37,300 மெட்ரிக் தொன் டீசலை இறக்கு வதற்கு நான்கு நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

இதன்படி, முத்துராஜவெல பெற்றோலிய சேமிப்பக வளாகத்தில் தரையிறங்கியுள்ள டீசலை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வரை முழுமையாக பெற்றுக்கொள்ளும் முன்னர் அவற்றை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, 37,300 மெற்றிக் தொன் எரிபொ ருளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளது. எனினும், இன்று காலையிலும் நாட்டின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
புதியது பழையவை