வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இன்று காலை, இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை, மாதகல் வீதியில் இன்று காலை, இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது என அப்பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
அச் சடலமாக உள்ளவரின் முகம் முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

அத்துடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் அவர் யார், எந்த இடத்தை சேர்ந்தவர், எவ்வாறு இறந்துள்ளார் என்ற எந்தவிதமான விபரங்களும் தெரியவரவில்லை எனவும்,
இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை