உரிய அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட முப்பதிற்கும் அதிகமான வளர்ப்பு ஆடுகளை கல்முனை பொலிசார் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியிலுள்ள காவல்துறை சோதனைக் காவலரணில் குறித்த ஆடுகளை கொண்டு வந்த லொறி உட்பட இருவர் இன்று(4) மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் தோப்பூர் பகுதியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி கொண்டுவரப்பட்ட சுமார் முப்பதிற்கும் அதிகமான ஆடுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி கால்நடைகளை லொறி ஒன்றில் அடைத்து சென்ற நிலையில் மீட்கப்பட்ட ஆடுகள் தொடர்பிலான நடவடிக்கையினை கல்முனை பிராந்திய உதவிக் பொலிசார் அத்தியட்சகர் ரி.எச்.எம். லசந்த புத்திகவின் நெறிப்படுத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சிசிரகுமார, றஹீம் பொலிஸ் உத்தியோகத்தர்களான சேனநாயக்க சாரதி வசந்த உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.


