மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மகளீர் தின கௌரவிப்பு நிகழ்வு

"நாடும் தேசமும் உலகமும் அவளே" என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளீர் தின கொண்டாட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று (10) திகதி இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக காணி பிரிவிக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவருபரஞ்ஜினி முகுந்தன் கலந்து கொண்டதுடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி.வில்வரெத்தினம் சிவப்பிரியா, மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எல்.பிரசந்தன், பிரதேச செயலக கணக்காளர் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், வர்த்தக தலைவர் , கிராமிய அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர், பொலிசார் , பிரதேச மகளீர் அமைப்புகளின் உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் என பலர் இதன்போது கலந்துகொண்டனர்.

சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு பெண்தொழில் முயற்சியாளர்களின் வர்த்தக கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டு அவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதான அம்சமாக பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் சிறந்த ஆளுமை, புத்தாக்கம் மற்றும் சிறந்த தொழில் முயற்சி போன்ற விடையங்களில் சாதனை படைத்த மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி. வில்வரெத்தினம் சிவப்பிரியா உள்ளிட்ட மூன்று சாதனைப்பெண்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், சூரியா பெண்கள் அமைப்பினரின் விழிப்புணர்வு நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு என்பன ஆற்றுகை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை