நாட்டின் பல பகுதிகளில் நீண்ட நேர மின்வெட்டு உள்ளது

இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம், நாட்டின் பல பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால், எதிர்காலத்தில் 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட கால அவகாசத்தை மீறி அதிகாரிகள் மின்வெட்டு விதிப்பது நெறிமுறைக்குப் புறம்பானது என்றும் ஜெயலால் கூறினார்.

தலைவர்கள் உண்மையைப் பேசவும், உடனடி எரிசக்தி நெருக்கடியை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும் வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

அடுத்த வாரம் முதல் திட்டமிடப்பட்ட மின்வெட்டுக் காலத்தை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று தெரிவித்தது.

அடுத்த மாதத்துக்குள் நிலக்கரி வாங்குவதற்கு மின்சார சபையிடம் போதிய நிதி இருக்காது என்றும் ஜெயலால் தெரிவித்தார்.
புதியது பழையவை