நாட்டில் பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி” - “எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள் பொறுப்பாளிகளா” - “அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய்” - “ தமிழர் தேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவர்” போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


