டீசல், எரிவாயு தட்டுப்பாட்டால் விவசாயிகள் நெருக்கடியில்

நாட்டில் நிலவும் டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை கூட்டு பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதுடன், கரட் மற்றும் லீக்ஸ் போன்ற மரக்கறிகளின் விற்பனையும் தடைப்பட்டுள்ளதாக மெனிங் சந்தை மற்றும் ஒன்றிணைந்த பொருளாதார நிலையங்கள் சங்கத்தின் பொருளாளரான நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.

மரக்கறிகளைக் கொள்வனவு செய்யும் மக்கள் குறைவடைந்துள்ள அதேவேளை கொழும்புக்கு வரும் மரக்கறிகளின் அளவும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டீசல் தட்டுப்பாட்டின் விளைவாக போக்குவரத்து செலவுகள் கடுமையாகவும் நியாயமற்ற வகையிலும் அதிகரித்துள்ளன.

எந்தவொரு பிரிவினரும் பிரச்சினைக்குத் தீர்வு காணவோ அல்லது போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவோ டீசல் சலுகைகளை வழங்கவோ தலையிடவில்லை.

தற்போதைய நிலைமை கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை