நிட்டம்புவ – ஹொரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் ஏற்பட்ட மோதலில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவ – ஹொரகொல்ல பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இளைஞர் ஒருவருக்கும் முச்சக்கரவண்டி சாரதியொருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் குறித்த இளைஞர்
கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இளைஞர், சிகிச்சைகளுக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
