பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கக் கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் இக்கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் . சிறிதரன், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.



