சமூகத்திற்கு ஒரு செய்தியை கொண்டுசெல்வதற்கு சினிமா ஒரு சிறந்த ஊடகமாக காணப்படுகின்றது.அதன் காரணமாக அதனை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக மட்;டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் சிப்ஸ் சினிமா நிறுவனத்தின் பணிப்பாளருமான குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
யுத்ததிற்கு பின்னர் பாதைமாறிச்செல்லும் தமிழ் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையிலான சினிமாக்களை உருவாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலேயே இவ்வாறான திரைப்படங்களை தயாரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து வெளிவரவுள்ள ‘எனக்குள்ளே’ என்னும் முழு நீள திரைப்படம் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்படவுள்ள நிலையில் இதுதொடர்பிலான விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ‘எனக்குள்ளே’ திரைப்படத்தின் இயக்குனர் கோடீஸ்வரன்,இசையமைப்பாளர் என்.கிஷான்,நடிகர் மற்றும் நடிகை ஜானு முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நம்ம சினீமாவை நாங்கள் ரசிக்கும்போதே மட்டக்களப்பின் சினிமாத்துறையினை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்லமுடியும் என இங்கு கருத்து தெரிவித்த இயக்குனர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பணிப்பாளர் டாக்டர் சுகுணன்,
யுத்தம் முடிந்த காலப்பகுதியில் இளைஞர்கள் வலுப்படுத்தவேண்டிய,நெறிப்படுத்தவேண்டிய தேவை சமூகவிரும்பிகளுக்கு காணப்படுகின்றது.
இலங்கையில் தமிழ் சினிமாவினை பொறுத்தவரையில் தமிழ் கலைஞர்களுக்கு சரியான தடம் கிடைக்கவில்லை.படைப்புகள் காத்திரமான முன்னேற்றம்நோக்கி கொண்டுசெல்லப்படவில்லையென்ற கவலை எங்கள் மத்தியில் காணப்படுகின்றது.
அந்த அடிப்படையில் வர்த்தக சினிமா என்ற நாமத்தின் அடிப்படையில் கலைஞர்களுக்கு உதவிகளை செய்யும் வகையில் இதனை முன்கொண்டுசெல்லவேண்டிய தேவை சமூகத்தில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு இருக்கின்றது.
இதன்கீழ் இந்த இளைஞர்களை நெறிப்படுத்தி வளப்படுத்தி அவர்களுக்கு ஒரு பொருளாதார ரீதியான பாதையினை அமைத்துக்கொடுத்தல் என்ற அடிப்படையில் அவர்களை ஊக்குவிக்கின்றோம்.


