பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய உறுதி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கருத்துச் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட மாட்டாதுஎன வௌிவிவகார அமைச்சர் G L பீரிஸ் தெரிவித்துள்ளார்.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் இடம்பெற்ற உயர்மட்டகூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்கள்மற்றும் தடுத்து வைக்கப்படுபவர்கள் ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் இலங்கை உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

மேலும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக ரீதியிலான சுதந்திரங்கள் இதன்ஊடாக மட்டுப்படுத்தப்படக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இதற்கான முதலாவது முயற்சியாக 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் G L பீரிஸ்தெரிவித்துள்ளார்.  

அத்துடன், இலங்கையின் இணக்கம் இன்றி 46/1 தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையின் மூலம், நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தவும்,கடந்த கால காயங்களை மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலம் வெறுப்பை ஏற்படுத்தவும், சமூகத்தை சீர்குலைக்கவும் மாத்திரமே முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான பல்தரப்புக் கட்டமைப்பின் செயற்பாட்டுப் பங்காளராக இலங்கை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் ஜனநாயக ரீதியானஅமைப்புகளின் மூலம் முன்னேறி சுதந்திரமான நீதித்துறையின் மூலம் செயற்படுத்தப்படுவதாகவும்வௌிவிவகார அமைச்சர் G L பீரிஸ் தெரிவித்துள்ளார். 
புதியது பழையவை