திருகோணமலையில் மோட்டார் சைக்கில் விபத்து ஒருவர் பலி

திருகோணமலை - உவர்மலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து இன்று (01) 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த சஹன் (15வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்த மற்றவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை