26 அமைச்சர்களும் இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளனர்

இலங்கை தனது தசாப்தகாலத்தில் எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் கையாண்டவிதம் குறித்து கடும் எதிர்ப்பும் ஆர்ப்பாட்டங்களும் காணப்படுகின்ற நிலையில் அரசாங்க அமைச்சர்கள் அனைவரும் ஒரேநேரத்தில் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

26 அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளனர் ஆனால் பிரதமரோ ஜனாதிபதியோ இராஜினாமா செய்யவில்லை.

அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளனர் என தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை