நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அனைத்து வலையங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களும்,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
