முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு

நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியை அடையாளம் தெரியாத நபர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.

நேற்றிரவு 10 மணியளவில் அந்த வீட்டிற்கு வந்த 6 பேர் கொண்ட குழுவொன்றே குறித்த முச்சக்கரவண்டிக்கு தீ வைத்து விட்டுத் தப்பி சென்றுள்ளது. 

இதனால் முச்சக்கரவண்டி பகுதியளவில் எரிந்து சேதமடைந்துள்ளது. 
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை