இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பபெறவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடு, சம்பா, சிவப்பரிசி உள்ளிட்ட 40 ஆயிரம் மெற்றிக் டொன் அரிசி நாட்டை வந்தடையவுள்ளதுடன் அவற்றை சலுகை விலையில் நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
