கிழக்கிலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய (13) தினம் மருத்துநீர் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆலய உதவி வண்ணக்கர் சுவேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இன்று ஆலயத்திற்கு அருகில் நடைபெற்றது.
தமிழ் -சிங்கள புத்தாண்டு தினத்தில் மருத்துநீர் தேய்த்துக் குளித்து ஆலய வழிபாடுகள் முன்னெடுக்கும் வழமை இந்துக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.


