இந்த உத்வேகம் இழக்கப்படக்கூடாது -எந்த தரப்பிலிருந்தும் எந்த வன்முறையும் இடம்பெறாமல் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்திற்கு அது வழிவகுப்பது மிக முக்கியமானது.
இலங்கையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு உலக தமிழர் பேரவை தனது ஆதரவை தெரிவித்துள்ளது
அறிக்கையொன்றில் உலக தமிழர் பேரவை இதனை தெரிவித்துள்ளது.
உலக தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கை மக்கள் தங்கள் இனம் –மதம்- தாங்கள் சார்ந்துள்ள கட்சி வாழும் நாடு போன்றவை எவ்வாறானதாகயிருந்தாலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தங்களின் மக்களின் முயற்சிகளுடன் தங்களை அடையாளம் காணவேண்டும் ஆதரவளிக்கவேண்டும்
இலங்கை பல நெருக்கடிகளின் மத்தியில்காணப்படுகின்றது-கடந்த இரண்டு வருடங்களாக உருவாகிவந்த பொருளாதார பேரிடர் நிலை தற்போது முழுமையான பொருளாதார அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது.
இந்த நெருக்கடியிலிருந்து அரசாங்கம் தங்களை மீட்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்- அச்சநிலை உருவாகிவருகின்றது – கடந்த காலங்களில் தமிழர் பகுதிகளில் மாத்திரம் காணப்பட்ட பட்டினி போசாக்கின்மை போன்றவை பரந்துபட்ட காணப்படும் அளவிற்கு நிலைமை இன்னமும் மோசமானதாக மாறப்போகின்றது.
இயலாமை,ராஜபக்ச வம்சாவளியின் திறமையின்மை -ஒடுக்குமுறை ஏதேச்சதிகார ஆட்சியை மக்கள் உணரத்தொடங்கியுள்ளதே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் மத்தியிலும் தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்களை உருவாக்கியுள்ளது.
இலங்கை சுதந்திரத்திற்கு பிந்தைய அதன் வரலாற்றில் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது- தோல்வியடைந்த நாடாக மாறிவருகின்றது.
இதுவருமானத்திற்கு அப்பால் வாழ்க்கை நடத்திய வரலாறு- தனது சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை இரண்டாம்தர பிரஜைகளாக நடத்திய தேசத்தை கட்டியெழுப்பும் தவறுகள்- தமிழ்சமூகத்தை ஒதுக்கிய கொள்கைகள் மூன்றுதாசப்த கால அழிவுடன் கூடிய யுத்தத்திற்கு வழிவகுத்தது-இடம்பெயர்வும் பாரிய பாதுகாப்பு செலவீனங்களும். அரசியல் அரவணைத்தல் முன்னர் போர் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து இராணுவத்தை அகற்றுதல் புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார ஆதரவை பெற்றுக்கொள்ளுதல் மூலம் 2009க்கு பின்னர் சமாதானத்தின் பலாபலன்களை பெற்றுக்கொள்ள தவறியமை, பிழையான முறையில் திட்டமிடப்பட்ட ஊழல் மிகுந்த பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் .
இலங்கையில் தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளிற்கான போராட்டத்தில் பல தசாப்தங்களாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 12 வருடங்களில் அவர்கள் மிகையான இராணுவபிரசன்னம் அற்றநிலையில் தங்கள் நிலங்களிற்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை வாழ்வது –காணாமல்போன உறவுகள் குறித்த உண்மையை அறிவது –உட்பட யுத்தத்தின் போரின் பல மோசமான விளைவுகளில் இருந்து விடுபட முயன்றுள்ளனர்.
உள்நாட்டு சர்வதேச அளவில் இலங்கை தலைவர்கள் பல வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் முன்னேற்றம் மிகக்குறைவானதாக காணப்படுகின்றது –மேலும் தென்பகுதி சிவில் சமூகத்தின் ஆதரவு மிகவும் குறைவானதாக காணப்படுகின்றது .
இவை அனைத்தும் நாட்டில் தற்போது இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியின் நம்பிக்கையின்மையை அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மக்களின் ஏமாற்றங்களை நாங்கள் பகிர்ந்துகொள்ளும் அதேவேளை இலங்கையில் நடக்கும் குறிப்பிடத்தக்க மற்றும் நம்பிக்கையூட்டும் விடயங்கள் – நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவற்றின் ஆற்றல் ஆகியவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
இந்த உத்வேகம் இழக்கப்படக்கூடாது -எந்த தரப்பிலிருந்தும் எந்த வன்முறையும் இடம்பெறாமல் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்திற்கு அது வழிவகுப்பது மிக முக்கியமானது.
