ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்  விமான சேவை  எதிர்வரும்  மூன்று வருடங்களுக்குள் தனது விமான சேவைகளின்   எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 3 வருடங்களுக்குள்   விமான சேவைகளின்   எண்ணிக்கையை  35 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 21 விமான சேவைகளுக்கான நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல்  காரணமாக  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகளின் எண்ணிக்கை தற்போது 24 ஆக குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குத்தகைக் காலம் நிறைவடைந்து வரும் விமானங்களுக்குப் பதிலாக புதிய விமானங்களை  கொள்வனவு செய்வதற்கு  திட்டமிட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.
புதியது பழையவை