நிதியமைச்சர் அலி சப்ரி இன்று அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் சர்வதேச கடன்களின் மீள் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச நாடுகளிடம் நிதியுதவிக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லும் தூதுக்குழுவுக்கு நிதியமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளார்.
மேலும், நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவில் மத்திய வங்கி ஆளுநர் Nandalal Weerasinghe மற்றும் நிதியமைச்சின் செயலாளர் Mahinda Siriwardana ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான தூதுக்குழு இன்று காலை அமெரிக்காவின் வொஷிங்டன் நோக்கி பயணமாகவுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கை அரசாங்கத்தின் கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
