நீர்கொழும்பில் ராஜபக்சர்கள் சவப்பெட்டியில் ஊர்வலம் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து , அதற்கு காரணமான ஜனாதிபதி கோட்டபாய உள்ளிட்ட ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் வீதிக்கு இறங்கி போராட தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் காலி முகத்திடலில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக கூடாரங்கள் அமைத்து பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிங்கள்- தமிழ் புத்தாண்டுகளுக்குகூட வீடுகளுக்கு செல்லாது போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்றையதினம் சவப்பெடிகள் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்ட நிலையில், அந்த பெட்டிகளின் மேல் ராஜபக்சர்கள் புகைப்படங்களை ஒட்டி மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.

