மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்திலுள்ள பிரம்பு காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இக் கைக்குண்டு இன்று சனிக்கிழமை (16) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் கைவிடப்பட்ட கைகுண்டை மீட்டுள்ளனர்.
மேலும், குறித்த குண்டு பழுதடைந்துள்ளதால் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
