மிரிஹான சம்பவம்! கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

சம்பவத்துடன் தொடர்புடைய 21 பேர் நேற்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

இதில், 15 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன்  6 பேர் ஏப்ரல் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
புதியது பழையவை