நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாளைய தினம் நாட்டின் பல பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மத்திய, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இவ்வாறு 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை