கொழும்பு பங்குச் சந்தை (CSE) இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு பங்குச்சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2022 ஏப்ரல் 22 வரை ஐந்து நாட்களுக்கு வணிக நடவடிக்கைக்காக CSE மூடப்படுகிறது.
கொழும்பு பங்குச் சந்தையின் பணிப்பாளர் சபை கடந்த வாரம் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக SEC தெரிவித்துள்ளது.
இதேபோன்ற கோரிக்கையை மேற்கோள் காட்டி கொழும்பு பங்கு தரகர்கள் சங்கம் உட்பட பல பங்குதாரர்களும் சந்தையை தற்காலிகமாக மூடுமாறு SEC க்கு தெரிவித்துள்ளனர்.
