2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு -15 சிறைக்கைதிகள் தோற்றுகின்றனர்

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று 15 சிறைக் கைதிகள் தோற்றுகின்றனர்.
இதற்கமைய , வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஒரு கைதியும், மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 முன்னாள் போராளிகள், வட்டரெக்க திறந்த சிறை முகாமிலுள்ள சுனீதா சிறைச்சாலைப் பாடசாலையில் கல்வி கற்கும் 10 சிறார் குற்றவாளிகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

அனைத்து கைதிகளும் மெகசின் சிறைச்சாலை, வட்டரெக்க சுனீதா சிறைச்சாலைப் பாடசாலையிலும் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளரான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
புதியது பழையவை