அடுத்து வரும் சில நாட்கள் நாட்டில் மழை

இன்றும் (31) மற்றும் அடுத்து வரும் சில நாட்களிலும் நாட்டில் மழை மற்றும் காற்றில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களுக்கு 100 மி.மீற்றருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும்.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதுடன் பலத்த காற்றும்(40-50 கி.மீ.) வீசக்கூடும்.
பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
புதியது பழையவை