எரிபொருள் பெளசர் விபத்து - இருவர் காயம்

லக்கல – மஹியங்கனை பிரதான வீதியின் எலோனகந்த பிரதேசத்தில் டீசல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹெட்டிபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை தொடர்ந்து பௌசரில் இருந்து எரிபொருள் கசிந்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை