நேபாளத்தில் தனியார் நிறுவனத்தால் இயக்கப்படும் விமானம் இன்று புறப்பட்டு சிறிது நேரத்தில் மாயமானது

நேபாளத்தில் தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய பயணிகள் விமானம் ஒன்று வெளிநாட்டினர் உட்பட 22 பேருடன் இன்று காணாமல் போனதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 9:55 மணிக்கு புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்தது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே, பொக்காரா - ஜோம்சோம் நகர் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தொடர்பை இழந்தது.

விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள், நேபாள குடிமக்கள் மற்றும் விமான பணியாளர்கள் என 22 பயணிகள் பேர் பயணித்துள்ளதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
குறித்த விமானம், முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள லெட்டின் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது.
புதியது பழையவை