மட்டக்களப்பில் TMVP என்று கூறப்படும் ஆயுதக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் முடிவுக்கு வருகிறது.
முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மற்றும் ஊடகவியலாளர்கள் ஏக்னலிகொட, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் உள்ளிட்டவர்களின் கொலை வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் அவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை கடந்த வருடம் நவம்பர் மாதம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை விட்டு வெளியேறிய கட்சியின் பிரச்சார செயலாளர் ஆர்சாத் மௌலானா தொடர்பாக டென்மார்க்கில் உள்ள அந்த கட்சியின் ஊடக செயலாளர் மதி குமாரசாமி அவர்கள் தற்போது ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆர்சாத் மௌலானா என்ற நபரை நிதி மோசடி மற்றும் பெண் தொடர்பான பிரச்சினை காரணமாக வெளியேற்றி விட்டதாக கூறிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தற்போது
சுமார் ஒரு வருடங்களுக்கு பின்னர் எங்களது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆர்சாத் மௌலானா கல்வி கற்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார் அவர் குறித்து வெளியான செய்திகளில் உண்மையில்லை என கூறி பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உண்மையில் ஆர்சாத் மௌலானா என்பவரை படுகொலை செய்வதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முயற்சி செயத போது அதில் இருந்து தப்பி ஓடிய அவர் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
2021.10.15 திகதி அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அவரை கொலை செய்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் முயற்சி செய்தாக குற்றவாளிகள் எழுந்துள்ளன.
அவர் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்கள் செய்த கொலை,கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், என அனைத்தையும் ஆதாரபூர்வமாக கூறியுள்ளதுடன் அதற்கான சாட்சியாக அவர் மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆர்சாத் மௌலானாவுடன் சமரசம் பேசும் முயற்சியில் மிக தீவிரமாக இறங்கி உள்ளனர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் புலம்பெயர் நிர்வாகிகள்.
காலம் கடந்த ஞானத்தின் செயற்பாடுகள் ஒரு போதும் பலனளிக்காது என கூறப்படுகிறது.
எனவே மீண்டும் சிறைக் கம்பிகளை எண்ண வேண்டிய நிலைக்கு கட்சியின் தலைவர் பிள்ளையான், செயலாளர் பிரசாந்தன் அவர்களது செயற்பாட்டாளர்கள் ஆகியோரை கொண்டுபோய் விட்டுள்ளது இந்த பிரச்சினை.



