அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினால் நிர்வகிக்கப்பட்டு வரும் சேனைக்குடியிருப்பு 01 A கிராம சேவகர் பிரிவில உள்ள சேனைக்குடியிருப்பு விதாவள நிலையம், கரவாகு மேற்கு பொது நூலகம் மற்றும் சேனைக்குடியிருப்பு விவசாய விரிவாக்க சேவை மத்திய நிலையம் என்பவற்றை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ளீர்ப்பதற்காக தவறான முறையில் தயாரிக்கப்பட்ட தகவல்களை வழங்கி அம்பாறை நில அளவை திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு அவர்களின் இணையத்தில் உள்ள கிராம சேவர்கள் பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கபட தனமாக நிலங்களையும், எல்லைகளையும் மாற்றி அமைக்கும் சூழ்ச்சியை மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
நாடே பொருளாதார பிரச்சனையில் இருக்கின்ற போதிலும், இவ்வாறான கீழ் தரமான செயல்களில் ஈடுபடும் அரசியல் பின் புலத்தில் இயங்கும் சில இன வாத அதிகாரிகளையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
பாலஸ்தீனத்தை எவ்வாறு இஸ்ரேல் ஆக்கிரமித்து அபகரித்து கொண்டிருக்கிறதோ, அதே போல கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக பகுதிகளின் அடையாளத்தை அழித்து, ஆக்கிரமித்து, சூழ்ச்சியால் கைப்பற்ற முனைய வேண்டாம்.

