நாடளாவிய ரீதியில் நாளை(24) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5, மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவையும் நாளைய தினம் கொள்வனவு செய்ய முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
