பிரதேச செயலாளர்கள் எரிபொருள் வழங்கல் நடவடிக்கையில் இருந்து விலகல்!

எரிபொருளை விநியோகிப்பதற்கான முறையான பொறிமுறையை அறிமுகப்படுத்தும் வரை அதில் பங்கேற்க வேண்டாம் என பிரதேச செயலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அத்தியவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு பிரதேச செயலாளர்கள் ஊடாக சிபாரிசு கடிதங்கள் வழங்கப்பட்டன.

அத்தியாவசிய சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைப்பதில்லை என பிரதேச செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அம்பியூலன்ஸ்கள் மாத்திரமே அத்தியாவசிய சேவைகளாக கருதப்படும் என்ற எரிசக்தி அமைச்சரின் அறிக்கையினால் தமது சேவைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து, பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தமது சேவைகளை வழங்குவதில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.
புதியது பழையவை