அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் 16 வயதுடைய இருவரை கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
