18 வைத்திய அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளுக்கும் நியமனம் பெற்று எமது பிராந்திய பணிமனையில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பலகாலமாக ஆளணியற்று காணப்பட்ட வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மாங்கேணி வைத்தியசாலை, மீராவோடை வைத்தியசாலை , காங்கேயனோடை வைத்தியசாலை, திக்கோடை வைத்தியசாலை , களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகள் அவற்றினுள் சிலவாகும்.
எமது மாவட்ட சுகாதார சேவையை முடிந்தவரை மேம்படுத்த திடசங்கற்பம் கொண்டு தடைகளை உடைத்தபடி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்நோக்கி நடைபயிலும்.
டாக்டர் குணசிங்கம் சுகுணன்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்




