கொழும்பு - தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த வங்கப் புலிக்குட்டிகளை பார்வையிட பொது மக்களுக்கு நேற்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புலிக்குட்டிகள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்துள்ளன. இந்நிலையில் குறித்த புலிக்குட்டிகள் பார்வையாளர்களைமிகவும் கவர்ந்துள்ளன.



