பதவி விலகப்போவதில்லை - கோட்டாபய பகிரங்க அறிவிப்பு

பதவிக்காலம் நிறைவடையும் வரை பதவி விலகப்போவதில்லை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அரச தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " தோல்வியடைந்த அரச தலைவராக பதவியிலிருந்து விலக முடியாது.
எனக்கு 5 வருடங்களுக்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக நான் பதவி விலகப்போவதில்லை.
அத்துடன் மீண்டும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை", எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை