சமையல் எரிவாவை ஏற்றிச் செல்லும் லாஃப் எரிவாயு நிறுவனத்தின் சுமை ஊர்தி ஒன்றை நிறுத்தி, காவல்துறை உத்தியோகஸ்தர் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்ளும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்தில் லாஃப் எரிவாயு எப்போது மீண்டும் சந்தைக்கு வரும் திகதியை அந்த நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
எனினும் அந்த எரிவாயு நிறுவனத்தின் சுமை ஊர்தியில் கொண்டு செல்லப்பட்ட எரிவாயு கொள்கலன்களை காவல்துறையினர் பெற்றுக்கொள்வது கேள்விகளை எழுப்பியுள்ளது.

