நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக மழைவீழ்ச்சி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.

இதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, காலி , மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனுராதபுர மாவட்டத்திலும் அவ்வப்போது மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு மலைச்சரிவுகளிலும், வடக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக் கூடும் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, காலி, களுத்தறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை