மின்சாரசபை தலைவர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

மின்சாரசபை தலைவர் கோப் குழு முன்னிலையில் குறிப்பிட்ட விடயங்களை தாம் முழுமையான நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் காற்றாலை மின்னுற்ப்பத்தி நிலையத்தை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாக மின்சாரசபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் காற்றாலை மின்னுற்ப்பத்தி நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி தன்னிடம் குறிப்பிட்டதாக மின்சாரசபை தலைவர் கோப் குழுவில் தெரிவித்தார்.

மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பில் அழுத்தம் கொடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் தனது கருத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மின்சாரசபை தலைவர் குறிப்பிட்டிருந்த கருத்தை தாம் முழுமையாக நிராகரிபபதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை