மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் எவருக்கும் எதுவித காயங்களும் ஏற்படவில்லை என மட்டக்களப்பு போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதான வீதி பகுதியில் வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த பேருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த கார் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ,
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
