மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி – வக்கி எல்லை பிரதான வீதிகள் செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வதில் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்ட குறித்த வீதியை நீண்டகாலமாக புனரமைத்துதருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த நிலையிலும் அதனை புனரமைக்க யாரும் நடவடிக்கையெடுக்காத நிலையில் போரதீவுப்பற்று பிரதேச சபையினால் குறித்த வீதியை தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளியிலிருந்து அம்பாறைக்குச் செல்லும் வக்கி எல்லை பிரதான வீதியானது நீண்ட நாட்களாக இந்த வீதியின் ஊடாக கல் மண் ஏற்றிச் செல்கின்றமையினால் வீதியானது குண்டும் குழியுமாக உடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இவ் வீதியினை புனரமைத்துதருமாறு நீண்டகாலமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அரசியல்வாதிகளிடம் முறையிட்ட போதும் யாரும் கவனிக்காத நிலையிலும் பல தடவைகள் ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தியும் இதற்கான தீர்வினை யாரும் வழங்காத நிலையியே காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மழைகாலங்களில் வீதி தார் ரோட் சேர் பூசிய வீதியாக நீர் நிரம்பி காணப்படும் நிலையேற்படுவதனால் வீதிஊடாக பயனம் செய்யும் போது பாடசாலை மாணவர்கள்,விவவசாயிகள்,கர்ப்பினி தாய்மார்கள்,முதியோர்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் பாறை கல்
தூசிகள் மூலம் வீதியினை பிரதேச சபை கனரக வாகனங்களின் உதவியுடனும் பிரதேசத்தில் உள்ளவர்களிடம் உள்ள கனரக வாகன உதவிகளுடன் செப்பனிடும் பணிகள் நேற்று(01) முன்னெடுக்கப்பட்டது.





