திருகோணமலை - மொரவெவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்திலிருந்து கொழும்பிற்கு லொறியொன்றில் டீசல் மற்றும் பெட்ரோலை கொண்டு சென்ற மூவர் ரொட்டவெவ பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காலி, ரத்னபுர, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
