வவுனியா பறனட்டகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜீப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.


