நாட்டில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும்!

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு ரூ. 100,000/- முதல் ரூ. 500,000/-.வரை அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்தகைய வர்த்தகர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் போது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளை பிடிக்க சுமார் 70 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், விலையை காட்ட தவறியதற்காக சுமார் 150 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை 210 ரூபாவாக அறிவித்து ஜூன் 10ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை